தமிழ்நாடு

உடுமலை அருகே யானை தாக்கி சுற்றுலா பயணி பலி

Published On 2022-11-03 08:07 GMT   |   Update On 2022-11-03 08:07 GMT
  • யானை தந்தத்தால் அக்பர்அலியின் நெற்றியில் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
  • உடுமலை-மூணாறு சாலையில் இரவு நேரம் யானைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும்

உடுமலை:

புதுக்கோட்டையை சேர்ந்த அக்பர்அலி என்பவர் உள்பட 3 பேர் கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா சென்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக அவர்கள் காரில் சென்றனர்.

நேற்றிரவு உடுமலை வனத்துறைக்குட்பட்ட சின்னார் பகுதியில் செல்லும்போது திடீரென யானை ஒன்று சாலையின் நடுவே வந்து நின்றது. இதைப்பார்த்து பயந்துபோன 3 பேரும் காரில் இருந்து இறங்கி ஓடினர். இதில் அக்பர்அலி யானையின் பிடியில் சிக்கிக்கொண்டார். அப்போது யானை தந்தத்தால் அக்பர்அலியின் நெற்றியில் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் உடுமலை மற்றும் கேரள மாநில வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அக்பர்அலி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடுமலை-மூணாறு சாலையில் இரவு நேரம் யானைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் , யானைகளை துன்புறுத்தக்கூடாது என்று வனத்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்தநிலையில் யானை தாக்கி சுற்றுலா பயணி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News