தமிழ்நாடு

வேடி

காரிமங்கலம் அருகே இன்று காலை யானை மிதித்து விவசாயி பலி

Published On 2023-04-27 05:13 GMT   |   Update On 2023-04-27 05:13 GMT
  • இயற்கை உபாதை கழிப்பதற்காக வேடி இன்று காலை அங்குள்ள ஏரிக்கு சென்று கொண்டிருந்தார்.
  • யானை விடாமல் துரத்தி வேடியை காலால் வயிற்றில் மிதித்தது.

காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேயுள்ள முக்குலம் பெரிய மொரசுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேடி (வயது55). விவசாயி. இவரது மனைவி குந்தியம்மாள். இவர்களுக்கு வெங்கடாசலம், வேட்ராய் என்கிற 2 மகன்களும், விஜி என்கிற ஒரு மகளும் உள்ளனர்.

இயற்கை உபாதை கழிப்பதற்காக வேடி இன்று காலை அங்குள்ள ஏரிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஒரு மாந்தோப்பின் அருகில் சென்றபோது யானை ஒன்று பின்தொடர்ந்து வந்தது. இதனை கவனித்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அங்கிருந்து தப்பியோடி சென்று கொண்டிருந்தார். ஆனால் அந்த யானை விடாமல் துரத்தி வேடியை காலால் வயிற்றில் மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி காரிமங்கலம் போலீசாருக்கும், பாலக்கோடு வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். யானை மிதித்து உயிரிழந்த வேடியின் உடலை பார்வையிட்டனர்.

உடனே அவரது உடலை கைப்பற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News