தமிழ்நாடு செய்திகள்

13 இடங்களில் மின் திருட்டு- ரூ.7.86 லட்சம் இழப்பீட்டு தொகை விதிப்பு

Published On 2022-09-24 08:59 IST   |   Update On 2022-09-24 08:59:00 IST
  • செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட 13 இடங்களில் மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
  • நுகர்வோருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.7 லட்சத்து 86 ஆயிரத்து 536 விதிக்கப்பட்டது.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட 13 இடங்களில் மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நுகர்வோருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.7 லட்சத்து 86 ஆயிரத்து 536 விதிக்கப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரச தொகை ரூ.42 ஆயிரத்தை செலுத்தியதால் அவர்கள் மீது போலீசில் புகார் எதுவும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News