தமிழ்நாடு

குடிநீர் வாரியம்

சென்னையில் 1,425 தெருக்களில் கழிவுநீர் கசடுகள் அகற்றம்- ஒரே வாரத்தில் குடிநீர் வாரியம் நடவடிக்கை

Published On 2022-08-04 06:38 GMT   |   Update On 2022-08-04 06:38 GMT
  • கடந்த வாரம் 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை தெருக்களில் கழிவுநீர் செல்லும் குழாய்கள், எந்திர நுழைவு வாயில்களில் உள்ள கசடுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன.
  • 1425 தெருக்களில் 7345 எந்திர நுழைவு வாயில்களில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 329 மீட்டர் நீளத்திற்கு பிரதான குழாய்களில் கசடுகள் அகற்றப்பட்டன.

சென்னை:

சென்னையில் 15 மண்டலங்களிலும் கடந்த வாரம் 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை தெருக்களில் கழிவுநீர் செல்லும் குழாய்கள், எந்திர நுழைவு வாயில்களில் உள்ள கசடுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன.

1425 தெருக்களில் 7345 எந்திர நுழைவு வாயில்களில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 329 மீட்டர் நீளத்திற்கு பிரதான குழாய்களில் கசடுகள் அகற்றப்பட்டன.

திருவொற்றியூர் மண்டலத்தில் 116 தெருக்களிலும் மணலியில் 45, மாதவரம் 17, தண்டையார்பேட்டை 134, ராயபுரம் 137, திரு.வி.க.நகர்129, அம்பத்தூர் 115, அண்ணாநகர் 149, தேனாம்பேட்டை 161, கோடம்பாக்கம் 144, வளசரவாக்கம் 51, ஆலந்தூர் 81, அடையாறு 108, பெருங்குடி 10, சோழிங்கநல்லூர் 28 தெருக்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டன.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் அடைப்பு, வழிந்தோடுதல் தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகத்திலும் மற்றும் பணிமனை அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு குடிநீர் வாரியம் கேட்டுக்கொண்டு உள்ளது.

Tags:    

Similar News