தமிழ்நாடு

திரவுபதி முர்மு

சென்னை வந்தார் திரவுபதி முர்மு- பாஜக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினார்

Published On 2022-07-02 11:42 GMT   |   Update On 2022-07-02 13:05 GMT
  • வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு.
  • திரவுபதி முர்முவை எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்றார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 18-ந்தேதி நடைபெறும் நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு சென்னை வந்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில்,மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், உள்ளிட்டோரும் திரவுபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் அதிமுக, பாஜக, பாமக எம்எல்ஏக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அங்கிருந்த மேடைக்கு வந்த திரவுபதி முர்முவை எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் தமிழக பாஜக கூட்டணி கட்சிகள் தமக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று திரவுபதிவு முர்மு கேட்டுக் கொண்டார்.

முன்னதாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரி சென்ற திரவுபதி முர்மு, அம்மாநில பாஜக கூட்டணி தலைவர்களிடம் ஆதரவு திரட்டினார்.

Tags:    

Similar News