தமிழ்நாடு

விநாயகர் கோவில் இடிப்பு- சிலை பறிமுதல்: இந்து முன்னணியினர் மறியலால் பரபரப்பு

Published On 2022-11-08 10:02 GMT   |   Update On 2022-11-08 10:02 GMT
  • பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் ஏராளமானோர் கோவில் இடிக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • திருப்பூர்-ஊத்துக்குளி ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவிற்கு உட்பட்ட சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விடப்பட்ட இடத்தில் கடந்த சில மாதங்களாக விநாயகர் கோவில் ஒன்று அமைக்கப்பட்டு அங்கு ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டி இருப்பதன் காரணமாக இன்று காலை வருவாய்த்துறையினர் கோவிலை இடித்து அப்புறப்படுத்தி விநாயகர் சிலையை எடுத்துச் சென்றனர் .

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் ஏராளமானோர் கோவில் இடிக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அப்பகுதி பொதுமக்களிடம் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் கோவில் இடித்ததை கண்டித்தும் கோவிலில் இருந்து அகற்றப்பட்ட விநாயகர் சிலையை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மறியல் காரணமாக திருப்பூர்-ஊத்துக்குளி ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கு பாதுகாப்புகள் என்ற போலீசார் மறைவில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினரை கைது செய்தனர்.

Tags:    

Similar News