தமிழ்நாடு

500 மதுக்கடைகள் மூடல்- மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

Published On 2023-06-22 06:24 GMT   |   Update On 2023-06-22 06:24 GMT
  • தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் எனும் தமிழக அரசின் அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது, பாராட்டுகிறது.
  • மதுபோதைக்கு அடிமையாகாத எதிர்காலத் தலை முறையை உருவாக்குவதற்குரிய அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் எனும் தமிழக அரசின் அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது, பாராட்டுகிறது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், கோயில்களுக்கு அருகில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் கடைகள் குறித்தும் ஆய்வு செய்து, அவற்றையும் அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்களுக்கு உதவ போதை மீட்பு மற்றும் மது நோயாளிகள் மறுவாழ்வு மையங்கள் தமிழகத்தின் அனைத்து தாலுகாவிலும் அரசு சார்பில் அமைக்கப்பட வேண்டும்.

மதுபோதைக்கு அடிமையாகாத எதிர்காலத் தலை முறையை உருவாக்குவதற்குரிய அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News