தமிழ்நாடு

மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அனகாபுத்தூர்-பம்மல் பகுதியில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு

Published On 2022-10-29 10:35 GMT   |   Update On 2022-10-29 10:35 GMT
  • அடையாறு ஆறு பகுதிகளிலும் எடுக்கப்பட்டு உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.
  • ஆய்வின்போது தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.

சென்னை:

சென்னை புறநகர் பகுதியான பம்மல் பகுதியில் ஒரு கோடியே 25 லட்சம் செலவில் நடைபெறும் ஓடை வடிகால் பணிகள் அனகாபுத்தூர் மேட்டு தெருவில் 4 கோடியே 50 லட்சம் செலவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளையும் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அடையாறு ஆறு பகுதிகளிலும் எடுக்கப்பட்டு உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் ஆய்வு செய்தார். அனகாபுத்தூர் பாலத்துக்கும் சென்று பார்வையிட்டார்.

மழைநீர் வடிகால் பணிகளை பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு தடுப்புகள் ஏற்படுத்தி தரமாக முடிக்க வேண்டும் என்றும் மழைநீர் கால்வாய் பணிகள் முடிவடைந்த பகுதிகளில் உடனடியாக பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சாலைகளை சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

அவருடன் நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா, தாம்பரம் மாநகராட்சி வெள்ளத்தடுப்பு கண்காணிப்பு அலுவலர் ஜான் லூயிஸ், பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.

Tags:    

Similar News