தமிழ்நாடு

மலைப்பகுதிகளில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கம்பளிச்சட்டை வழங்க ஏற்பாடு

Update: 2022-09-29 10:14 GMT
  • அடுத்த கல்வியாண்டில் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 71.61 லட்சம் காலுறைகள் வழங்கவும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
  • அடுத்த கல்வியாண்டில் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 71.61 லட்சம் காலுறைகள் வழங்கவும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தடையின்றி கல்வி பயில ஏதுவாக சீருடை, புத்தகப்பை, காலுறை, கம்பளிச் சட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பள்ளிக் கல்வித்துறை வழங்கி வருகிறது.

அந்தவகையில் மாநிலம் முழுவதும் மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டில் (2023-2024 ) 1.17 லட்சம் கம்பளிச் சட்டைகள் (ஸ்வெட்டர்கள்) தைத்து வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகம் கோரி உள்ளது.

அதேபோல் அடுத்த கல்வியாண்டில் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 71.61 லட்சம் காலுறைகள் (சாக்ஸ்) வழங்கவும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

Tags:    

Similar News