தமிழ்நாடு

வாழ்நாள் சான்றுக்காக ஆவின் ஓய்வூதியதாரர்கள் இனி நேரில் வரத் தேவையில்லை

Published On 2023-02-07 07:12 GMT   |   Update On 2023-02-07 07:12 GMT
  • வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கலாம்.
  • ஓய்வூதியதாரர்கள் வயதான காலத்தில் அலையக்கூடாது என்பதற்காக புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை:

ஆவின் பால் நிறுவனத்தில் 4500 ஓய்வூதியதாரர்களும் 3500 குடும்ப ஓய்வூதியதாரர்களும் மொத்தம் 8 ஆயிரம் பேர் உள்ளனர். இதுநாள் வரையில் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழ் வருடத்திற்கு ஒரு முறை நேரில் சென்று புதுப்பிக்க வேண்டும்.

இந்த நடைமுறை தற்போது மாற்றம் செய்யப்பட்டு வீட்டில் இருந்தபடியே தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் புதிய திட்டம் இந்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையா கூறியதாவது:

ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், வாழ்நாள் சான்றிதழ் சமர்பிக்க இனிமேல் ஆவின் அலுவலகத்திற்கு நேரில் வரத் தேவையில்லை. தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்தவாறே செல்போன் மூலமாக வாழ்நாள் சான்றை சமர்ப்பிக்கும் டிஜிட்டல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் வயதான காலத்தில் அலையக்கூடாது என்பதற்காக இந்த வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 8 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News