தமிழ்நாடு

900 அரிசி மூட்டைகள் மாயம்- நுகர்பொருள் வாணிப கிட்டங்கி ஊழியர்கள் 5 பேர் சஸ்பெண்டு

Published On 2022-09-14 04:03 GMT   |   Update On 2022-09-14 04:03 GMT
  • நுகர்பொருள் வாணிப கழகத்தின் அலுவலர்கள் கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டனர்.
  • கிட்டங்கி பொறுப்பாளர் உள்பட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான உணவு பொருள் கிட்டங்கி உள்ளது. இங்கு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அலுவலர்கள் கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது இருப்பில் இருக்க வேண்டிய 900 அரிசி மூட்டைகள் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து அலுவலர்களிடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கிட்டங்கி பொறுப்பாளர் உள்பட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.

அதன் பேரில் பொறுப்பாளர் தர்மராஜ், உதவி பொறுப்பாளர் ஜெய்சங்கர், இளநிலை உதவியாளர் ரெங்கசாமி, எழுத்தர்கள் ஆறுமுகம் மற்றும் உலகநாதன் ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் மண்டல மேலாளர் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News