தமிழ்நாடு

சீர்திருத்த பள்ளியில் இரும்பு கதவை உடைத்து 6 சிறுவர்கள் தப்பி ஓட்டம்- கோயம்பேட்டில் 3 பேர் பிடிபட்டனர்

Published On 2023-04-13 11:07 GMT   |   Update On 2023-04-13 11:07 GMT
  • கோயம்பேடு பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்த 6 சிறுவர்களில் 3 பேரை போலீசார் மீட்டனர்.
  • தப்பியோடிய 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை:

சென்னை புரசைவாக்கம் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 23 சிறுவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் சிறுவர்கள் அடைக்கப்பட்டி ருந்த கதவு உடைப்பது போன்ற சத்தம் காவலாளிக்கு கேட்டதால், உடனடியாக சென்று பார்த்தார். அப்போது கதவு உடைக்கப்பட்டு சிலர் தப்பி சென்றது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி இது குறித்து உடனடியாக தலைமைச் செயலக காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீஸ் விசாரணையில் மணலி காவல் நிலையத்தில் குற்றவழக்கு ஒன்றில் கைதான சிறுவன் அறையின் இரும்பு கதவுகளை கடப்பா கல் மூலமாக உடைத்து தப்புவது தெரிய வந்தது. மீதமுள்ள அனைத்து அறை களையும் உடைத்து மற்ற சிறுவர்களையும் தப்பிக்க வைக்க முயற்சி செய்திருப்ப தும் தெரிய வந்தது. இதனையடுத்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து கதவை உடைத்து தப்பி ஓடிய 6 சிறுவர்களை போலீசார் அருகில் உள்ள முட்புதரில் தீவிரமாக தேடினர்.

இந்நிலையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்த 6 சிறுவர்களில் 3 பேரை போலீசார் மீட்டனர். தப்பியோடிய 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News