தமிழ்நாடு

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 5,598 கன அடி நீர் திறப்பு

Published On 2023-10-11 05:30 GMT   |   Update On 2023-10-11 05:30 GMT
  • மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபினி அணை அமைந்துள்ளது.
  • கபினி அணைக்கு வினாடிக்கு 2,684 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

சேலம்:

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் இன்று காலை நிலவரப்படி 100. 64 அடி (மொத்த கொள்ளளவு 124.80 அடி) தண்ணீர் இருந்தது.

இந்த அணைக்கு வினாடிக்கு 5,578 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3,598 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபினி அணை அமைந்துள்ளது. கபினி அணைக்கு வினாடிக்கு 2,684 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5,598 கனஅடி தண்ணீர் காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News