தமிழ்நாடு

44 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேகமாக நிரம்பும் ஏரிகள்

Published On 2023-11-16 06:49 GMT   |   Update On 2023-11-16 06:49 GMT
  • பல இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • 28- ஏரிகள் 75-சதவீதம். 63-ஏரிகள் 50 சதவீதம், 175- ஏரிகள் 25 சதவீதம் எட்டி உள்ளது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

காஞ்சிபுரம் மாதா கோவில் தெரு, தாமல்வார் தெரு, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு, ரங்கசாமி குளம், இரட்டை மண்டபம், பெரியார் நகர், விளக்கடி பெருமாள் கோவில் தெரு போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கி செல்கிறது.

அதேபோல காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஆவா கூட்டை தெரு, லிங்கப்பன் தெரு முருகன் காலனி பல்லவர் மேடு போன்ற இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மழையின் காரணமாக உள்ளாவூர் மதகுஏரி, காம்மராஜபுரம் ஏரி, பழைய சீவரம் அருக்கேன்டாண் ஏரி, கரூர் தண்டலம்ஏரி, கட்டவாக்கம் ஏரி, புத்தேரி கோவிந்தவாடி சித்தேரி, பெரிய கரும்பூர் மதகு ஏரி, சக்கரவர்த்தி தாங்கள், கூரம் சித்தேரி, தாமல் கோவிந்தவாடி பெரிய ஏரி, தாமல்சக்கரவர்த்தி ஏரி, தாமல் சித்தேரி, கோவிந்தாவாடி பெரிய ஏரி, வேளியூர் பெரிய ஏரி, வெளியூர் சித்தேரி ஆகிய முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

காஞ்சிபுரம் பகுதியில் மொத்தம் 381- ஏரிகள் உள்ளன. இதில் ஏரிகள் முழுவதும் நிரம்பியது. 28- ஏரிகள் 75-சதவீதம். 63-ஏரிகள் 50 சதவீதம், 175- ஏரிகள் 25 சதவீதம் எட்டி உள்ளது. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் விவசாயத்துக்கு நீர் பாசனத்திற்கு இந்த பயன்பாட்டுக்கு உகந்த பெரிய ஏரிகளான தாமல், ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், தென்னேரி, உத்திரமேரூர், மணிமங்கலம், போன்ற ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

Tags:    

Similar News