தமிழ்நாடு செய்திகள்
பர்கூர் வனப்பகுதியில் உலா வந்த புலி

பர்கூர் வனப்பகுதியில் இரவு நேரத்தில் உலா வந்த புலி- கண்காணிப்பு கேமராவில் பதிவு

Published On 2022-04-27 10:04 IST   |   Update On 2022-04-27 10:04:00 IST
மாலை நேரங்களில் வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டிச்செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அந்தியூர்:

அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் மான், கரடி, புலி, செந்நாய், காட்டெருமை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த நிலையில் வனப்பகுதிக்குள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்தியூர் வனச்சரகம் தாமரைக்கரை, பர்கூர் வனச்சரகம் தட்டகரை உள்ளிட்ட வனப்பகுதிகளில் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டு புலிகளின் நடமாட்டம் குறித்தும், எத்தனை புலிகள் வருகின்றன என்பது குறித்து அறிவதற்காக வனத்துறை சார்பில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டது.

இந்த நிலையில்அந்தியூர் வனச்சரகதிற்கு உட்பட்ட வரட்டுப்பள்ளம் அணை, கொம்புதூக்கி வனப்பகுதி, அத்தாணி பீட் உள்ளிட்ட இடங்களிலும், பர்கூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தாமரைக்கரை வனப்பகுதியில் இரவு நேரத்தில் புலி ஒன்று நடமாடுவது வனத்துறையினர் வைத்த கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனால் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் வசிக்க கூடிய மலைவாழ் மக்கள் இருசக்கர வாகனம் மற்றும் நடைபாதை வழியில் நடந்து செல்ல வேண்டாம். மேலும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்பவர்கள் எச்சரிக்கையோடு வனப்பகுதிக்குள் இருக்க வேண்டும்.

மாலை நேரங்களில் வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டிச்செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News