தமிழ்நாடு செய்திகள்
கொலை

புஞ்சைபுளியம்பட்டியில் நாதஸ்வர கலைஞர் அடித்து கொலை- உறவினர்கள் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை

Published On 2022-04-22 13:50 IST   |   Update On 2022-04-22 13:50:00 IST
புஞ்சைபுளியம்பட்டியில் நாதஸ்வர கலைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உறவினர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி மாரப்ப கவுண்டன்புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (52). நாதஸ்வர கலைஞர். இவர் இன்று காலை தண்ணீர்பந்தல்- மாரப்ப கவுண்டன்புதூர் செல்லும் வழியில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பழனிச்சாமி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் டி.எஸ்.பி. ஜெயபாலன், இன்ஸ்பெக்டர்கள் வேலுச்சாமி (புஞ்சைபுளியம்பட்டி), நெப்போலியன் (சத்தியமங்கலம்) மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது பழனிச்சாமி தனது உறவினர்கள் 2 பேருடன் நேற்று இரவு இந்த பகுதியில் மது குடித்தது தெரிய வந்தது. மேலும் மது குடிக்கும் தகராறில் ஏற்பட்ட மோதலில் அவரை அடித்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் பழனிச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக உறவினர்கள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட பழனிச்சாமிக்கு முத்தம்மாள் என்ற மனைவியும், வேலுச்சாமி என்ற மகனும், பத்மாவதி என்ற மகளும் உள்ளனர். 

Similar News