தமிழ்நாடு செய்திகள்
விக்கிரமராஜா

உணவு பாதுகாப்புத்துறை உரிமம் ஆயுள் உரிமமாக்க பரிசீலனை- விக்கிரமராஜா வரவேற்பு

Published On 2022-04-02 12:53 IST   |   Update On 2022-04-02 12:53:00 IST
உணவுப் பாதுகாப்புத்துறை உரிமம் ஆயுள் உரிமமாக மாற்றிட பரிசீலனையில் இருப்பதாக தெரியவருகிறது. அதற்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
சென்னை:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்ஏ.எம். விக்கிரம ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நீண்ட நாட்களாக உணவுப் பொருள் வணிகத்தில் இருக்கும் மளிகை கடைகள், உணவகங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவற்றிற்கான உணவுப்பாது காப்புத்துறை உரிமம் ஒரு முறை எடுத்தால் மட்டுமே போதும் என பல முறை மத்திய அரசுக்கு கோரிக்கை அளித்து வலியுறுத்தி வந்தது.

அதன் விளைவாக, உணவுப் பாதுகாப்புத்துறை உரிமம் ஆயுள் உரிமமாக மாற்றிட பரிசீலனையில் இருப்பதாக தெரியவருகிறது. அதற்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இதுமட்டும் அல்லாது வணிகத்திற்கான உரிமங்களும் ஒற்றைச்சாளர முறையில் ஓரிடத்திலேயே, ஒருமுறையிலேயே பெற்றுக் கொள்ளும் வகையில் சட்ட விதிகளில் மாற்றங்கள் செய்து வணிக உரிமம் எடுப்பதை எளிமைப் படுத்திட பேரமைப்பு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News