கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு அடிக்கடி மது மற்றும் குட்கா பொருட்களை மர்ம கும்பல் கடத்தி வருகின்றனர்.
கர்நாடக மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது
பதிவு: ஜனவரி 17, 2022 14:10 IST
கோப்புப்படம்
ஒசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சின்ன எலசகிரி மாரியம்மன் கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக, அனேகல் தாலுகா, அத்திபள்ளியை சேர்ந்த முத்து (வயது 48) மற்றும் பேகேப்பள்ளி பகுதியை சேர்ந்த முரளி (30) ஆகிய இருவரும் காரில் வந்து கொண்டிருந்தனர்.
அவர்களை மதுவிலக்கு பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் கர்நாடக மதுபாட்டில்கள் 19 லிட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த மதுபாட்டில்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :