கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவண்ணாமலையில் தடையை மீறி பக்தர்கள் கிரிவலம்
பதிவு: ஜனவரி 17, 2022 13:32 IST
கிரிவலப் பாதையில் சென்ற காரை போலீசார் தடுத்து நிறுத்திய காட்சி
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களிலும் கிரிவலம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தை மாத பவுர்ணமி தினமான இன்றும், நாளையும் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி இல்லை.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இன்று அதிகாலை வரை பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதன் பின்னர் போலீசார் தடுப்புகளை வைத்து கிரிவலம் செல்வதை தடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் தடையை மீறி பக்தர்கள் கிராமங்கள் வழியாக கிரிவலம் சென்றனர். அவ்வாறு செல்லும் பக்தர்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால் கிரிவல பாதையில் பல இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்தனர்.