தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 11-ந் தேதி தூத்துக்குடி வருகை

Published On 2022-01-05 08:51 GMT   |   Update On 2022-01-05 08:51 GMT
முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் சர்வதேச தரத்தில் பர்னிச்சர் பூங்கா அமைக்கப்படும் என அரசு அறிவித்தது.

அதன்படி சிப்காட் பகுதியில் இந்த பர்னிச்சர் பூங்கா அமைய உள்ளது. இதன்மூலம் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்த பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து 20 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தூத்துக்குடி- எட்டயபுரம் ரோட்டில் உள்ள வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா ஆகியவை நடைபெறுகிறது.

இந்த விழாக்களிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மாலையில் இந்த விழாக்கள் நடைபெறுகிறது. பின்னர் அவர் விருதுநகர் செல்கிறார்.

மறுநாள் (12-ந்தேதி) பிரதமர் மோடி பங்கேற்கும் விருதுநகர் மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Tags:    

Similar News