தமிழ்நாடு செய்திகள்
எடப்பாடி பழனிசாமி பெயர் பொறித்த கல்வெட்டு உடைப்பு- அ.தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு
ஆத்தூர் அருகே எடப்பாடி பழனிசாமி பெயர் பொறித்த கல்வெட்டு உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது நரசிங்கபுரம். இங்கு சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் அ.தி.மு.க. ஆட்சியில் ரூ. 3½ கோடி மதப்பில் பாலம் கட்டப்பட்டது. அந்த பாலத்தில் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் பொறித்த கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு யாரோ மர்ம நபர்கள் அந்த கல்வெட்டை உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு ஆத்தூர் எம்.எல்.ஏ. ஜெயசங்கரன், நகர அ.தி.மு.க. தலைவர் மணிவண்ணன் மற்றும் நிர்வாகிகள் சென்று உடைக்கப்பட்ட கல்வெட்டை பார்வையிட்டனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில் இந்த கல்வெட்டை மீண்டும் அதே இடத்தில் வைக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
இதுபற்றி போலீசில் புகார் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.