தமிழ்நாடு
கொரோனா வைரஸ்

திண்டுக்கல் அருகே அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று

Published On 2021-12-09 04:42 GMT   |   Update On 2021-12-09 04:42 GMT
திண்டுக்கல் அருகே அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மற்ற மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இநத பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்படவே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் பள்ளிக்கு வந்து அந்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்கள், பணியாளர்கள் என 61 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

மேலும் அந்த பள்ளி வகுப்பறை பூட்டப்பட்டு வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தொற்று கண்டறியப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பரிசோதனை முடிவு வரும் வரை வீட்டில் இருந்தே பாடங்களை படிக்க அறிவுறுத்தப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தினந்தோறும் 3,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News