செய்திகள்
போலீஸ்காரர் மீது சேற்றை அள்ளி வீசிய டீ மாஸ்டர்.

போலீஸ்காரரை தாக்கிய டீ மாஸ்டர் கேரளா தப்பி ஓட்டம்- 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு

Published On 2021-06-25 07:12 GMT   |   Update On 2021-06-25 07:12 GMT
தென்காசி அருகே டீ மாஸ்டர் ஒருவர் மதுபோதையில் போலீஸ்காரருடன் தகராறில் ஈடுபட்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.
சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கல்லத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அசோகன் (வயது 27).

இவர் சென்னையில் ஒரு கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்தார். அசோகன் குடிபோதையில் அங்குள்ள சாலையில் நின்று கொண்டு தகராறு செய்து கொண்டு இருப்பதாக சின்னக்கோவிலான்குளம் போலீசாருக்கு புகார் சென்றது.

அதன் பேரில் விசாரணை நடத்துவதற்காக போலீஸ்காரர் பாலகிருஷ்ணன் அங்கு சென்று அப்பகுதி பொதுமக்களிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தார்.

அப்பேது அங்கு வந்த அசோகன் குடிபோதையில் பாலகிருஷ்ணனை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு அவர் மீது சேற்றை அள்ளி வீசியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தார்.

இது குறித்து பாலகிருஷ்ணன் சின்னகோவிலான்குளம் போலீசில் புகார் செய்தார். இதே போல் அசோகன் அதே பகுதியை சேர்ந்த அய்யாத்துரை என்பவரிடமும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாகவும் புகார் செய்யப்பட்டது.

அசோகன் குடிபோதையில் போலீஸ்காரரிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலைமிரட்டல், கொலை முயற்சி, பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் அசோகன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையறிந்த அசோகன் கேரளாவிற்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
Tags:    

Similar News