செய்திகள்
ஆறுகாட்டுதுறையில் வீடு வீடாக முக கவசம் வழங்கும் ஆசிரியை வசந்தா

வேதாரண்யம் பகுதிகளில் 10 லட்சம் முக கவசங்களை இலவசமாக வழங்கும் ஆசிரியை

Published On 2021-04-17 10:48 IST   |   Update On 2021-04-17 10:48:00 IST
வேதாரண்யம் பகுதிகளில் கொரோனாவை தடுக்க 10 லட்சம் முக கவசங்களை இலவசமாக வழங்கிய ஆசிரியையை பொதுமக்கள் பாராட்டினர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கருப்பம்புலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆசிரியை. வசந்தா. இவர் அண்டர்காடு சுந்தர விலாஸ் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.

கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின் போது இசைக்கலைஞர்கள், குடிசைவாழ்மக்கள், நாடோடிகள், நரிக்குறவர்கள், வடமாநில தொழிலாளர்களுக்கு என சுமார் ரூ.50 லட்சம் ரூபாய் செலவில் உணவு, மாஸ்க், உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

சமூக அக்கறையோடு கணவர் சித்திரவேல் உதவியோடு தற்போது 10 லட்சம் முகக்கவசங்கள் வாங்கி அதனை பொதுமக்களுக்கு வீடு தேடி சென்று வழங்கி வருகிறார்.

ஆசிரியை வசந்தா மற்றும் சித்திரவேலுவின் சமூகப்பணியை பொதுமக்கள் பாராட்டினர்.

இவர்களின் சமூக பணியை பாராட்டி இதுவரை 50-க்கும் மேற்பட்ட விருதுகளை சமூகநல அமைப்புகள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Similar News