செய்திகள்
தற்கொலை

மாமியார் இறந்த துக்கத்தில் அரசு ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை

Published On 2020-11-21 12:19 IST   |   Update On 2020-11-21 12:46:00 IST
மாமியார் இறந்த துக்கத்தில் அரசு ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய குடியிருப்பில் வசித்து வந்தவர் ரகுராமன் (வயது 52). அரசு ஆம்புலன்ஸ் டிரைவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மாமியார் இறந்துவிட்டார். அதுமுதல் ரகுராமன் துக்கத்தில் மிகவும் சோகமாக இருந்துள்ளார். குடிப்பழக்கமும் இருந்ததால் குடித்துவிட்டு விரக்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரகுராமன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ரகுராமனின் மகன் துளசிராமன் கொடுத்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News