செய்திகள்
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண்

புதுவையில் மேலும் 22 கட்டுப்பாட்டு மண்டலம்

Published On 2020-07-19 12:22 IST   |   Update On 2020-07-19 12:22:00 IST
புதுவையில் மேலும் 22 இடங்களை கட்டுப்பாட்டு மண்டலமாக மாவட்ட கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி 1.நைனார்மண்டபம் துலுக்கானதம்மன் நகர் முதல் குறுக்குத்தெரு, 2.புதுச்சேரி அரவிந்தர் வீதி, 3.முதலியார்பேட்டை இந்திரா நகர் காந்தி வீதி, 4.நைனார்மண்டபம் வள்ளலார் நகர் கோதாவரி வீதி, 5.தேங்காய்திட்டு மருதம் வீதி, 6.நைனார்மண்டபம் திருமால் நகர் ராகவேந்திரா வீதி, 7.வாணரப்பேட்டை முருகசாமிதோப்பு ராஜராஜன் வீதி, 8.முதலியார்பேட்டை ரோடியார் மில் வீதி, 9.புதுச்சேரி சங்கரதாஸ் வீதி, 10.குமரகுருபள்ளம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, 11.நைனார்மண்டபம் துலுக்கானத்தம்மன் நகர் 5-வது குறுக்குத்தெரு, 12.முதலியார்பேட்டை வைத்திலிங்கசெட்டி வீதி, 13.ரெட்டியார்பாளையம் மரியாள் நகர் முதல் முதன்மை சாலை 4-வது குறுக்குத்தெரு, 14.ரெட்டியார்பாளையம் தேவா நகர் 3-வது குறுக்குத்தெரு, 15.சாணரப்பேட்டை புதுத்தெரு,

16.கதிர்காமம் ராதாகிருஷ்ணன் நகர், விநாயகர் கோவில் வீதி, 17.காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு (பி2-36), 18.தட்டாஞ்சாவடி வி.வி.பி.நகர் சுப்பையா வீதி, 19.தட்டாஞ்சாவடி காமராஜ் நகர் வாணிதாசன் வீதி, 20.தர்மாபுரி செட்டி வீதி, 21.தட்டாஞ்சாவடி காமராஜ் நகர் இளங்கோ வீதி, 22.கருவடிக்குப்பம் நாகம்மன் நகர் ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் பொது போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News