செய்திகள்
அமைச்சர் கமலக்கண்ணன்

புதுச்சேரியில் மாணவர்களுக்கு அரிசி, பணம் வழங்கப்படும்: அமைச்சர் கமலக்கண்ணன்

Published On 2020-07-18 15:30 IST   |   Update On 2020-07-18 15:30:00 IST
புதுச்சேரியில் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.250 பணமும் வழங்கப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் 10,38,716 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 671 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,273 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம், புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவ, மாணவிகள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.  ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளது. புதுச்சேரியிலும் பெரிய அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் கூறியதாவது:

புதுச்சேரியில் 1 - 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.250 பணமும் வழங்கப்படும். 6-8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.330 வழங்கப்படும்.

மதிய உணவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து மாணவர்களுக்கு அரிசி, பணம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News