செய்திகள்
கொரோனா வைரஸ்

வேலூர் கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா சோதனை

Published On 2020-06-06 14:33 IST   |   Update On 2020-06-06 14:33:00 IST
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஏ பிளாக்கில் வருவாய் துறை உதவியாளராக குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பணியாற்றி வருகிறார். அவருடைய உறவினர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இதனையடுத்து வருவாய் உதவியாளர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ரத்தம், சளி மாதிரி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் வேலூர் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 80க்கும் மேற்பட்டோருக்கு ரத்தம், சளி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.

இதன் முடிவுகள் நாளை வெளிவரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News