செய்திகள்
கைது

ஆம்பூரில் போலி நகை அடகு வைக்க முயற்சி- 3 பேர் கைது

Published On 2020-02-08 11:32 IST   |   Update On 2020-02-08 11:32:00 IST
ஆம்பூரில் போலி நகை அடகு வைக்க முயற்சியில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த பனங்காட்டூரை சேர்ந்தவர் கிரண் (வயது 25). இவர் ஆம்பூர் பஸ் நிலையம் அருகே நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

நேற்று ஒரு பெண் 2 ஆண் ஆகியோர் நகைக்கடைக்கு வந்தனர் அப்போது அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த வளையல்களை அடகு வைக்க வேண்டும் எனக் கூறினர்.

அவர்களிடமிருந்து வளையலை வாங்கிய கிரண் உரசிப் பார்த்த போது அது பித்தளை வளையல் என தெரியவந்தது.

இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அப்போது அங்கிருந்த பெண் திடீரென மாயமானார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த 2 ஆண்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர் .

விசாரணையில் அவர்கள் இருவரும் ஊத்தங்கரையை சேர்ந்த மாரியப்பன் (35), ஹரிஅரசன் (23) எனவும், மாயமான பெண் அதே பகுதியை சேர்ந்த இந்திரா (48) என தெரியவந்தது .

இதையடுத்து போலீசார் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்த இந்திராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கும்பல் இதேபோல் வேறு எங்கெல்லாம் பித்தளை நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்,

Similar News