செய்திகள்
ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சுவாதி, மதன்

காதலனுடன் நர்சிங் மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

Published On 2019-11-19 10:24 IST   |   Update On 2019-11-19 10:24:00 IST
பண்ருட்டி அருகே காதலனுடன் நர்சிங் மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தொரப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுவாதி (வயது22). இவர் அந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.

கோட்டலாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மதன் (22) இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலைபார்த்து வந்தார்.

இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனவே காதலர்கள் வாழ்வில் இணைய முடியாவிட்டாலும், சாவிலாவது இணைவோம் என்று முடிவெடுத்து தற்கொலை செய்ய தீர்மானித்தனர். அதன்பின் 2 பேரும் நேற்று இரவு பணப்பாக்கம் வந்தனர். அங்குள்ள ரெயில்வே கேட்பகுதியில் உள்ள தண்டவாள பகுதிக்கு சென்றனர்.

சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது இருவரும் கைகளை கோர்த்தப்படி நின்றனர்.

ரெயில் அருகே வந்ததும் கண்களை மூடிக்கொண்டு பாய்ந்தனர். இதில் அவர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இதனை பார்த்த ரெயில் என்ஜீன் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த கடலூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 2 பேரின் உடல்களை கைபற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News