செய்திகள்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக இந்து தமிழர் கட்சியில் ரெயில் மூலம் செங்கல்கள் அனுப்பிய காட்சி

ராமர் கோவில் கட்டுவதற்கு கடலூரில் இருந்து செங்கல்கள் அனுப்பிய இந்து தமிழர் கட்சியினர்

Published On 2019-11-11 10:44 GMT   |   Update On 2019-11-11 10:44 GMT
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு கடலூர் இருந்து ரெயில் மூலம் இந்து தமிழர் கட்சியினர் 25 ஆயிரம் செங்கல்களை அனுப்பினர்.
கடலூர்:

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அதன்படி ராமர் கோவில் கட்டுவதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், விசுவ இந்த பரி‌ஷத்தும் தீவிரம் காட்டி வருகிறது.

ராமர் கோவில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா ஏப்ரல் மாதம் ராம நவமி அன்று நடத்த இரு அமைப்புகளும் திட்டமிட்டு உள்ளது. அதோடு நாடு முழுவதும் உள்ள இந்து அமைப்பினர் இந்த கோவில் கட்டுவதற்கு உதவ முன் வந்து உள்ளனர்.

அதன்படி கடலூரில் இருந்து இந்து தமிழர் கட்சியினர் ரெயில் மூலம் செங்கல்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று காலை கடலூர் திருப்பாபுலியூர் ரெயில் நிலையத்துக்கு வந்த அந்த கட்சியினர் மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமையில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் பரணிதரன் முன்னிலையில் 25 ஆயிரம் செங்கல்கள் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

முன்னதாக இந்து தமிழர் கட்சியினர் 5 செங்கல்களை எடுத்து அதில் காவி துணி கட்டினர். அந்த செங்கல்களை ரெயில் அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
Tags:    

Similar News