செய்திகள்
ஈரோட்டில் தா.பாண்டியன் பேட்டி அளித்த காட்சி.

மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்லும் தமிழக அரசு- தா.பாண்டியன் ஆவேசம்

Published On 2019-07-14 13:07 GMT   |   Update On 2019-07-14 13:14 GMT
மத்திய அரசுக்கு தமிழக அரசு தனது சுயமரியாதையை விட்டு கொடுத்து வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தா .பாண்டியன் கூறியுள்ளார்.

ஈரோடு:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தா .பாண்டியன் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய - மாநில அரசுகள் மத்திய பட்ஜெட்டை சமர்ப்பித்து உள்ள நிலையில் இவற்றுக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது என்பதை சொல்ல வில்லை. மத்திய அரசு பட்ஜெட் ஊக்கம் நம்பிக்கை தரும் பட்ஜெட்டாக இருந்திருந்தால் பங்கு சந்தையில் ஏற்றம் இருந்திருக்கும்.

மத்திய அரசு அறிவித்த பட்ஜெட் தினம் முதல் பங்கு சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இந்தியாவை மாற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

உலக மையம் கொள்கை படி எங்கு வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம்.

ஆனால் அமெரிக்கா நான் சொல்லும் நாடுகளுடன் தான் பொருளாதார வைத்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி வருகிறது. இதனால் இந்தியா கச்சா எண்ணைய் குறைந்த இடத்தில் வாங்கி வரும் ஒப்பந்தத்தை கைவிட்டு அமெரிக்கா நிர்பந்தத்தில் அதிக அளவில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் இடத்தில் ஒப்பந்தம் போட்டு உள்ளது. இதன்மூலம் அயல்நாட்டு நேர் முதலீடு இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு திரும்பிச் செல்கிறது. கிட்டத்தட்ட பட்ஜெட் அறிவித்த பிறகு ஒரே நாளில் 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி வெளிநாடுகளுக்கு சென்று உள்ளது. இதன் மூலம் பிரகடனம் செய்யாத வணிக போரை அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கிறது. டிரம்புக்கு எதிராக வணிக போர் நடத்தும் சக்தி இந்தியாவுக்கு இல்லை.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களை பாதிக்கும்

விவசாயிகள் பாதிக்கும் திட்டத்தை பெரும்பான்மை கொண்டு நிறைவேற்றியதால் அனைத்து பகுதிகளிலும் மக்கள் போராட்டத்தை தொடங்கவுள்ளனர்.

நீட் தேர்வு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் கைது போன்ற நடவடிக்கைகளில் தமிழக அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்கிறது.

இவற்றிக்கு தீர்வு கிடைக்க இடதுசாரி அமைப்புகள் முன்னெடுத்து செல்லும்.

கீழடி அகழ்வாராய்ச்சி மையத்தில் பணி புரிவோருக்கு இந்தியில் தேர்வு, தபால் துறையில் மத்திய அரசு ஆங்கிலம், இந்தி மொழியில் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவித்து உள்ளது தமிழக அரசு தனது சுயமரியாதையை விட்டு கொடுத்து வருகிறது என்பதை காட்டுகிறது.

இவர் அவர் கூறினார்.

Tags:    

Similar News