செய்திகள்

ஈரோட்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செல்போன் கடைக்காரர் கைது

Published On 2019-06-22 16:47 IST   |   Update On 2019-06-22 16:47:00 IST
ஈரோட்டில் சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த செல்போன் கடைக்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு:

ஈரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (34) இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. அப்பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில் இவரது மனைவியின் தோழியான 17 வயது சிறுமியுடன் ரமேஷ் நட்பு ரீதியில் பழகி உள்ளார். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கடந்த 2018-ம் ஆண்டில் சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்து சிறுமியின் தாய் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை ரமேசை போலீசார் கைது செய்தனர். ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News