செய்திகள்

8 வழிச்சாலை திட்டம் ரத்து: மேல்முறையீடு செய்தால் தவறில்லை- ஜான்பாண்டியன் பேட்டி

Published On 2019-04-09 13:06 GMT   |   Update On 2019-04-09 13:06 GMT
8 வழிச்சாலை திட்டம் வளர்ச்சியை முன்னோக்கியது. ஆகவே தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்வதில் தவறில்லை என்று ஜான் பாண்டிணன் கூறியுள்ளார்.

கரூர்:

கரூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேவேந்திர குல வேளாளர்கள் பற்றி இதுவரை பேசாத தி.மு.க. தேர்தல் நேரத்தில் பேசுவது தேர்தல் ஆதாயத்திற்காக தான். அவர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்டு விட்டது. தேர்தல் நேரத்தில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவேன் என்பதும், விவசாய கடன்களை ரத்து செய்வேன் என்பதும் கேலிக்கூத்தாக உள்ளது.

ஆனால் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் உள்ளிட்ட திட்டம் ஏற்று கொள்ளும்படியானதாக இருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் ஒரு சில இடங்களில் நடக்கலாம். அதற்காக நாடு முழுவதும் நடப்பதாக கூற முடியாது. 8 வழிச்சாலை திட்டம் வளர்ச்சியை முன்னோக்கியது. ஆகவே தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்வதில் தவறில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News