செய்திகள்

கொடுமுடி அருகே தொழிலாளி கொலை வழக்கில் கள்ளக்காதலி வாக்கு மூலம்

Published On 2019-04-01 15:48 IST   |   Update On 2019-04-01 15:48:00 IST
என்னிடம் மட்டும் தான் உல்லாசமாக இருக்க வேண்டும் மிரட்டல் விடுத்ததால் தொழிலாளியை கொலை செய்தேன் என்று கள்ளக்காதலி வாக்கு மூலம் அளித்துள்ளார்.

ஈரோடு:

கொடுமுடி அருகே உள்ள வாழநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது45). இவர் கொங்கு தேச மறு மலர்ச்சி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி இணை செயலாளராக இருந்தார்.

இந்நிலையில் சிவகுமார், வடக்கு புதுபாளையம் சுடுகாடு பகுதியில் தலை உள்பட உடம்பில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை கண்ட அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிவகுமார் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது சிவக்குமாருக்கு சில பெண்களுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக போலீசார் அறிந்தனர்.

இதை வைத்து நடத்திய விசாரணையில் சிவக்குமாரின் கள்ளக்காதலி கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூரை சேர்ந்த செல்வி (29) சிக்கினார். போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் சென்ற செல்வி மற்றும் சின்னுசாமி என்பவரும் சிக்கினர்.

போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சிவக்குமாரை கொலை செய்ததை செல்வி ஓப்புக் கொண்டார்.

போலீசாரிடம் அவர் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறியதாவது.-

எனது கணவர் செந்தில் குமாரும், சிவக்குமாரும் நண்பர்கள். இதன் மூலம் எனக்கும் சிவக்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுவே எங்களுக்குள் கள்ளத் தொடர்பாக மாறியது.

இந்த நிலையில் சிவக்குமாருடன் எனக்கு தகராறு ஏற்பட்டது. அவர் என்னிடம் மட்டும் தான் உல்லாசமாக இருக்க வேண்டும் வேறுயாரிடமும் இருக்க கூடாது. மீறினால் கொன்று விடுவேன் என்று கூறி மிரட்டல் விடுத்தனர்.

இதனால் அவர் மீது எனக்கு வெறுப்பும் ஆத்திரமும் ஏற்பட்டது. கொலை செய்ய திட்டமிட்டேன்.

என்னுடன் எழுமாத்தூர் மில்லில் வேலை பார்க்கும் சிலருடன் சேர்ந்து சிவக்குமாரை அடித்து கொன்றோம். இரும்பு கம்பியால் தாக்கினோம். பிறகு அவரை சுடுகாடு பக்கம் போட்டு விட்டு சென்று விட்டோம்.

தப்பி சென்ற போது எங்களை போலீசார் விசாரணை நடத்தி பிடித்து கொண்டனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News