செய்திகள்

நாளை மறுநாள் வங்கி ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தம்

Published On 2018-12-24 06:52 GMT   |   Update On 2018-12-24 06:52 GMT
வங்கிகள் இணைப்பைக் கண்டித்து வருகிற 26-ந்தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று 9 வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.#BankStrike

சென்னை:

பாங்க் ஆப் பரோடா வங்கியுடன் விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளதற்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதை கண்டித்து கடந்த 21-ந்தேதி வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடபட்டனர். இதனால் வங்கி சேவை, பண பரிமாற்றம் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில் 9 அரசு மற்றும் தனியார் வங்கிகளின் ஊழியர்களை கொண்ட சங்கங்கள் நாடு முழுவதும் வருகிற 26-ந்தேதி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.

இப்போராட்டத்தில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கிறார்கள். இதனால் வங்கி பணி பரிமாற்றம் மற்றும் சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும்.

இதுபற்றி வங்க ஊழியர்களின் ஐக்கிய கூட்டமைப்பு கூறும்போது, “அனைத்து வங்கிகளையும் இணைத்து மிகப்பெரிய வங்கியை உருவாக்க மத்திய அரசு விரும்புகிறது. பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைத்தாலும் உலகில் முதல் 10 இடத்துக்குள் வர முடியாது.

இதனால் வங்கிகளின் பல்வேறு கிளைகள் மூடப்பட்டு வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்” என்று கூறி உள்ளது. #BankStrike

Tags:    

Similar News