செய்திகள்

வண்டலூர் பூங்காவில் 7 புதிய வண்ண கிளிகள்- பொதுமக்கள் பார்க்கலாம்

Published On 2018-10-19 09:47 GMT   |   Update On 2018-10-19 09:47 GMT
வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்காக புதியதாக 7 வண்ண கிளிகள் வைக்கப்பட்டு உள்ளன. இவைகளை பொதுமக்கள் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #VandalurPark
சென்னை:

வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்காக புதியதாக 7 வண்ண கிளிகள் வைக்கப்பட்டு உள்ளன.

இதுதொடர்பாக பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வண்டலூர் பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்கு புதிய ஏழு பறவை இனங்கள் வைக்கப்பட்டுள்ளது. அவை ‘ஸ்கார்லெட் பஞ்சவர்ண கிளி, கேட்டிலைனா பஞ்சவர்ணகிளி, ஹர்லிகுயின் பஞ்சவர்ண, சீவர் பஞ்சவர்ணகிளி, டஸ்கீ பாய்னஸ், ரூபெல்ஸ் கிளி, அமேசான் ஆரஞ்ச் இறகு கிளி’ ஆகும்.

இப்பறவைகள் பொதுவாக மத்திய மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் காணப்படுபவை. இந்த புதிய பறவையினங்கள் சென்னையில் மீட்கப்பட்டு பின்னர் கால்நடை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த பறவைகள் நல்ல ஆரோக்கியமான நிலைக்கு வந்ததனால் பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் வண்ணமிகு நிறங்கள் மற்றும் தனித்துவமான குரலின் மூலம் அதிக பார்வையாளர்களை ஈர்க்க கூடியதாக உள்ளது.


உயிரியல் பூங்காவில் ஏற்கனவே 89 வகையான பறவை இனங்கள் உள்ளன. அதில் உள்ளூர் பறவையினம் 61 மற்றும் அயல்நாட்டு பறவை இனங்கள் 28 என ஆக மொத்தம் 1604 எண்ணிக்கையில் பறவைகள் உள்ளன. இப்பறவைகள் நல்ல முறையில் இனப்பெருக்கம் செய்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #VandalurPark
Tags:    

Similar News