செய்திகள்

ஈவ் டீசிங் செய்ததால் சீர்காழி கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை- 2 வாலிபர்கள் கைது

Published On 2018-10-16 16:01 IST   |   Update On 2018-10-16 16:01:00 IST
சீர்காழி அருகே ஈவ்- டீசிங் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். #eveteasing
சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காரைமேடு பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகள் ராகவி (வயது 20). இவர் பூம்புகார் அரசு கல்லூரியில் பி.காம். படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காரைமேடு அரசு பள்ளியில் வாக்காளர் பெயர் சேர்க்கை முகாம் நடந்தது. இதனால் பெயரை சேர்ப்பதற்காக மாணவி ராகவி அங்கு சென்றார்.

பிறது பெயரை விண்ணப்பிக்க மனு செய்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்க அப்துல் என்கிற காளிமுத்து (30), பஞ்சு என்கிற வினோத் ஆகியோர் திடீரென மாணவி ராகவியை வழிமறித்து கிண்டல் செய்தனர். ராகவிடம் திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்டனர்.

இதை கேட்டு ஆவேசமடைந்த ராகவி, அவர்கள் 2 பேரையும் திட்டியுள்ளார். பிறகு அவர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

பிறகு தனக்கு நடந்த ஈவ் டீசிங் சம்பவத்தை நினைத்து அவர் மனமுடைந்து காணப்பட்டார். சிறிது நேரம் கழித்து வினோத்தின் தாயை சந்தித்து பேசினார்.

அப்போது உங்களது மகன் என்னை கிண்டல் செய்து வருகிறான். தொடர்ந்து பலமுறை இதேபோல் நடந்து வருவதால் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கோபத்துடன் கூறி விட்டு சென்றார்.

பிறகு வீட்டுக்கு சென்ற அவர் பின்புறத்தில் இருந்த மரத்தில் ராகவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈவ்- டீசிங் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து ராகவியின் தந்தை முனியப்பன், வைத்தீஸ்வரன் கோவில் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவியை ஈவ் டீசிங் செய்த காளிமுத்து, வினோத் ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர். கைதான 2 பேரும் சிற்ப சுதை தொழிலாளிகளாக இருந்து வருகின்றனர். #eveteasing
Tags:    

Similar News