செய்திகள்

கொள்கையில் இருந்து விலக மாட்டேன் - புதுச்சேரி முதல்வருக்கு கவர்னர் கிரண்பேடி பதிலடி

Published On 2018-05-10 10:33 IST   |   Update On 2018-05-10 10:33:00 IST
வளமான புதுவையை உருவாக்க பாடுபடும் நான், என் கொள்கையில் இருந்து விலக மாட்டேன் என்று புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார். #KiranBedi
புதுச்சேரி:

புதுச்சேரியில் கவர்னர் கிரண் பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையிலான அதிகார மோதல் தீவிரமடைந்துள்ளது. மத்திய அரசின் நம்பிக்கையை இழந்த பிறகு கவர்னராக கிரண்பேடி தொடரக்கூடாது என்றும், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.



இதுவரை 3 முறை கவர்னரின் முடிவுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதால், இதன் பிறகும் கவர்னராக கிரண்பேடி பதவியில் தொடர்வதா? என்பது குறித்து கிரண்பேடிதான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

நாராயணசாமியின் இந்த கருத்துக்கு கவர்னர் கிரண் பேடி டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.

‘நான் ராஜினாமா செய்ய வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்துகிறார். ஒருவர் வேலையில் இருந்து விலகலாம், ஆனால் கொள்கையில் இருந்து விலக முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்’ என கிரண் பேடி கூறியுள்ளார். தான் புதுச்சேரியின் வளர்ச்சிக்காக பாடுபடுவதாகவும் கிரண்பேடி கூறியுள்ளார். #KiranBedi 
Tags:    

Similar News