செய்திகள்
மாணவனால் கத்தியால் குத்தப்பட்ட தலைமை ஆசிரியருக்கு வயிறு, காதில் ஆபரேசன்
மாணவனால் கத்தியால் குத்தப்பட்ட தலைமை ஆசிரியருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வயிறு, காதில் ஆபரேசன் செய்யப்பட்டது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் ரெயில் நிலைய ரோட்டில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளியின் தலைமை ஆசிரியர் பாபு (வயது 52). நேற்று முன்தினம் தலைமை ஆசிரியர் பாபு வகுப்பறைகளை பார்வையிட்டவாறே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மேல்தளத்தில் காலியாக இருந்த வகுப்பறையில் 5 மாணவர்கள் அரட்டை அடித்து கொண்டிருந்தனர். தலைமை ஆசிரியரை பார்த்ததும் ஒரு மாணவர் ஓடிவிட்டார். 4 மாணவர்கள் இருந்தனர். அவர்களில் கடைசி இருக்கையில் பிளஸ்-1 படிக்கும் மாணவன் ஹரிகரன் இருந்தார். தலைமை ஆசிரியர் பாபு 3 மாணவர்களை கண்டித்து வகுப்பறைக்கு அனுப்பிவிட்டு கடைசி இருக்கையில் இருந்த மாணவன் ஹரிகரனை நோக்கி வந்தார்.
அவனையும் கண்டித்த போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் தலைமை ஆசிரியர் பாபுவை வயிறு, காது, முகத்தில் மாணவன் ஹரிகரன் சரமாரியாக குத்தினான்.
இதில் நிலைகுலைந்த அவர் கீழே சரிந்தார். தலைமை ஆசிரியரின் அலறல் சத்தம் கேட்டு மற்ற ஆசிரியர்கள் ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மாணவன் ஹரிகரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது பள்ளிக்கு வரவேண்டாம் என்று தலைமை ஆசிரியர் தொடர்ந்து அவமானப்படுத்தி திட்டி வந்ததால் அவரை கத்தியால் குத்தினேன் என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து மாணவனை கைது செய்த போலீசார் அவரை செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
கத்தி குத்தால் தலைமை ஆசிரியரின் வயிறு, காது, முகத்தில் காயம் ஏற்பட்டது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைச்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வயிறு, காதில் ஆபரேசன் செய்யப்பட்டது. பின்னர் அவர் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
தலைமை ஆசிரியரை முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் பார்வையிட்டு உடல் நலம் விசாரித்தார். அதைத் தொடர்ந்து முதன்மை கல்வி அதிகாரி திருப்பத்தூர் பள்ளிக்கு சென்று கத்தி குத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். சம்பவ இடத்தில் இருந்த 4 மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தினார்.
கத்திகுத்து சம்பவம் வேதனையளிக்கிறது. மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.