செய்திகள்

போலீசார் வழக்குப்போடுவதை கண்டித்து கடலூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2017-11-27 20:36 IST   |   Update On 2017-11-27 20:36:00 IST
கடலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் கடலூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் கடலூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

அதன்படி தலைமை தபால் நிலையம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியினர் இன்று திரண்டனர். அவர்களிடம் உங்களுக்கு இங்கு போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று போலீசார் கூறினர்.

ஆனால், அங்கு திரண்டிருந்த கட்சியினர் அருகில் இருந்த அம்பேத்கார் சிலைக்கு மாலை அணி வித்து விட்டு சிலை எதிரே மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனால் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் திருமேனி, தொகுதி செயலாளர் அறிவுடைநம்பி, நகர செயலாளர் செந்தில், ஒன்றிய செயலாளர் நிலவன், நிர்வாகிகள் பாலமுருகன், மகேஷ், ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News