செய்திகள்
வீட்டுசுவர் இடிந்து விழுந்து பலியான லதா

கடலூர் அருகே வீட்டுசுவர் இடிந்து விழுந்து பெண் பலி

Published On 2017-10-31 12:13 IST   |   Update On 2017-10-31 12:13:00 IST
கடலூர் அருகே மழை காரணமாக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. கடலூர் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் போன்ற பகுதிகளில் இன்று காலையில் பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு கடலூர் அருகே பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

கடலூர் அடுத்த பில்லாலிதொட்டி பெரிய காலனியை சேர்ந்தவர் ரவி(வயது 45). இவர் பாத்திரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லதா(36). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

இன்று காலை லதா தண்ணீர் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒருவரது வீட்டின் சுவர் மழை காரணமாக திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் லதா இடிபாட்டுக்குள் சிக்கி கொண்டார். உடனே அவர் கூச்சல்போட்டு அலறினார்.

அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிய லதாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் லதா பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Similar News