செய்திகள்
செங்கல்பட்டில் பா.ஜனதா பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
செங்கல்பட்டில் பா.ஜனதா பிரமுகர் வீட்டின் முன்பகுதியில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு டவுன், அனுமந்த் புத்தேரி பழைய ஜி.எஸ்.டி. சாலையில் வசித்து வருபவர் சீனிவாசன். பா.ஜனதா கட்சியில் நகர துணைத் தலைவராக உள்ளார். வீட்டு முன்பு மளிகை கடை வைத்து இருக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு அவர் கடையை மூடிவிட்டு குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார்.
நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் சீனிவாசன் வீட்டின் முன் பகுதியில் பெட்ரோல் குண்டை வீசி தப்பி சென்று விட்டனர்.
பெட்ரோல் குண்டு வெடித்து சிதறிய சத்தம் கேட்டு சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே வந்தனர்.
அதிர்ச்சி அடைந்த அவர்கள் செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சீனிவாசன் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார். இதில் பலருடன் அவருக்கு தகராறு இருந்ததாக தெரிகிறது.
இந்த மோதலில் எதிர்தரப்பினர் சீனிவாசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி இருக்கலாம் என்று தெரிகிறது.
பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களின் உருவம் சீனிவாசன் வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
அதில் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வருவதும், பின்னர் ஒருவன் மட்டும் இறங்கி சீனிவாசன் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு கூட்டாளியுடன் தப்பி செல்வதும் பதிவாகி இருக்கிறது.
கேமராவில் பதிவான வாலிபர்களின் உருவம் மற்றும் மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பா.ஜனதா பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.