செய்திகள்
கல்லூரி விடுதி மாடியில் இருந்து தவறி விழுந்து என்ஜீனியரிங் மாணவர் பலி
கல்லூரி விடுதி மாடியில் இருந்து செல்போனில் பாட்டு கேட்டு கொண்டிருந்த என்ஜீனியரிங் மாணவர் தவறி விழுந்து பலியானார்.
செங்கல்பட்டு:
தாம்பரம் அருகே உள்ள பொத்தேரி இன்ஜீனியர் கல்லூரியில் படித்து வருபவர் ஜான் ஆக்ரின்(20). சமையல் கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது சொந்த ஊர் நாகர்கோவில்.
கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் ஜான் ஆக்ரின் தினமும் இரவு மாடியில் செல்போனில் பாட்டு கேட்டவாறு நடந்து கொண்டிருப்பார்.
நேற்று இரவு உணவு அருந்தி விட்டு விடுதியின் இரண்டாவது மாடிக்கு சென்றார். அப்போது அவரது செல்போனில் பாடல் கேட்டு கொண்டிருந்தார்.
திடீரென்று தவறி கீழே விழுந்தார். இதை பார்த்த மாணவர்கள் அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலை ஜான் ஆக்ரின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.