செய்திகள்

வெயிலில் பணிபுரியும் போலீசாருக்கு நீர்மோர், குளிர்பானம் வழங்கப்படுமா?

Published On 2017-04-22 07:34 GMT   |   Update On 2017-04-22 07:34 GMT
கடும் வெயிலில் கடமையாற்றும் போலீசாருக்கு வெயிலின் தாக்கம் குறைக்கும் வகையில் நீர்மோர் மற்றும் குளிர்பானங்களை வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காஞ்சீபுரம்:

தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் மிக அதிகளவில் உள்ள நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிக அளவில் உள்ளது.

காஞ்சீபுரத்தைச் சுற்றியுள்ள ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகள் உள்ளதால் தொழிலாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங் கள் அதிகளவில் காஞ்சீபுரம் சாலைகளில் இயக்கப்படுகின் றன. எனவே எந்த நேரத்திலும் காஞ்சீபுரம் சாலைகள் நெரிசலாகவே காணப்படுகிறது.

மேலும் கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பட்டுசேலைகள் எடுக்கவரும் வெளிமாநில மக்களும் அதிகளவில் வாகனங்களில் வருவதால் போக்குவரத்து காவல்துறையினர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பணி செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட காவல் துறையினரால் வெயிலில் பணியாற்றும் போலீசாருக்கு நீர்மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் இருந்தது.

தற்போது அத்திட்டம் செயல்பாட்டில் இல்லை. எனவே கடும் வெயிலில் கடமையாற்றும் போலீசாருக்கு வெயிலின் தாக்கம் குறைக்கும் வகையில் நீர்மோர் மற்றும் குளிர்பானங்களை வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Similar News