செய்திகள்
வேப்பத்தி பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் சதீஸ் சேதமடைந்த வாழைகளை பார்வையிட்ட போது எடுத்த படம்.

அந்தியூர் அருகே பலத்த காற்றுடன் மழை: ரூ.50 லட்சம் மதிப்புள்ள வாழைகள் சேதம்

Published On 2017-03-20 10:28 GMT   |   Update On 2017-03-20 10:28 GMT
அந்தியூர் அருகே பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த கோர மழைக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள வாழைகள் சேதமடைந்தது.
அந்தியூர்:

அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி ஊராட்சிக்குட்பட்ட வேப்பத்தி, ஓத்திபட்டி, வெள்ளாளபாளையம், தாளபூட்டைபுதூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன் தினம் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த கோர மழையுடன் காற்று வீசியதில் ஏராளமான வாழைகள் சேதமடைந்தது.

இதில் வேப்பத்தி பகுதியை சேர்ந்த எஸ்.பி.பெருமாள் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் உள்ள கதளி வாழை, செவ்வாழை, மோந்தல் வாழை ஆகிய வாழை பயிர்கள் சேதமடைந்து உள்ளது.

மேலும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சின்னப்பன், சம்பத், குருமூர்த்தி, மனோகரன் உள்பட விவசாயிகளின் வாழைகளும் சாய்ந்து நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. வேப்பத்தி பகுதியில் மட்டும் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள வாழைகள் சேதமடைந்து உள்ளது.

விவசாய நிலங்களில் வாழைகள் சேதமடைந்த சம்பவ இடத்திற்கு வந்து கிராம நிர்வாக அலுவலர் சதீஸ் மற்றும் நிலவருவாய் ஆய்வாளர் பூங்கொடி ஆகியோர் பார்வையிட் டனர். சூறாவளி காற்றில் வாழைகளை இழந்த விவசாயிகள் மிகுந்த கவலையுடன் உள்ளனர்.

பலத்த காற்றில் சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Similar News