செய்திகள்

ஆர்.கே.நகர் தேர்தலில் தீவிரமாக உழைத்து வெற்றி பெறுவோம்: தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2017-03-20 09:44 IST   |   Update On 2017-03-20 09:44:00 IST
பா.ஜனதா சார்பில் போட்டியிடும் கங்கை அமரனை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் ஆதரிக்க வேண்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தீவிரமாக உழைத்து வெற்றி பெறுவோம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கோபி:

ஈரோடு வடக்கு மாவட்ட பா.ஜனதா செயல் வீரர்கள் கூட்டம் கோபிசெட்டி பாளையத்தில் நடந்தது. இதில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தற்போது தமிழ்நாட்டில் அ.தி.மு.க என்ற ஒரு கட்சியே கிடையாது. அது பல துண்டாக உடைந்து விட்டது. இதனால் அந்த கட்சியின் சின்னம் இரட்டை இலை முடக்கி வைக்கப்படும் என்றே தெரிகிறது.

ஆர்.கே. இடைத்தேர்தலை தி.மு.க.வும் மற்றும் காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.

பா.ஜனதா சார்பில் கங்கை அமரன் போட்டியிடுகிறார். ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும். இந்த இடைத்தேர்தலில் நாங்கள் தீவிரமாக உழைத்து வெற்றி பெறுவோம்.

மத்திய அரசு தமிழக மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக செயல்பட்டு வருகிறது. மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Similar News