செய்திகள்

ராமேசுவரம் கடற்கரையில் ரூ. 10 லட்சம் கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

Published On 2017-03-15 11:09 IST   |   Update On 2017-03-15 11:09:00 IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 10 லட்சம் மதிப்பிலான 70 கிலோ கஞ்சாவை கியூபிராஞ்ச் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
ராமேசுவரம்:

ராமேசுவரம் அக்காள் மடத்தில் இருந்து குந்துகால் கடற்கரை செல்லும் வழியில் மர்ம பார்சல், கேட்பாரற்ற நிலையில் கிடப்பதாக கியூ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அவர்கள் விரைந்து சென்று அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு இடத்தில் பெரிய அளவிலான பார்சல் கிடப்பது தெரியவந்தது. இதனை கைப்பற்றி சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பார்சலில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான 70 கிலோ கஞ்சா இருந்தது.

இது தொடர்பாக கியூபிராஞ்ச் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் தங்கச்சிமடம் வ.உ.சி.நகரை சேர்ந்த குருநாதன் (வயது 38) என்பவர், அந்த கஞ்சாவை இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Similar News