செய்திகள்
பயிர்கள் கருகியதால் மனவேதனை: 2 பெண்கள் மயங்கி விழுந்து மரணம்
கடலூர் மாவட்டத்தில் பயிர்கள் கருகியது கண்டு மனமுடைந்த 2 பெண்கள் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தனர்.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் சாகுபடி செய்த விவசாய பயிர்கள் கருகி வருகின்றன.
பயிர்கள் கருகியது கண்டு மனமுடைந்த 2 பெண்கள் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தனர். அதன் விவரம் வருமாறு:-
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே யுள்ள தீவளூரைச் சேர்ந்த வர் செல்வராஜ். இவரது மனைவி ஜெகதாம்பாள் (வயது 50). செல்வராஜ் இறந்து விட்டதால் ஜெகதாம்பாள் தனியே வசித்து வந்தார்.
அந்த பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். பயிர்கள் கருகியதால் ஜெகதாம்பாள் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் வயலுக்குச் சென்ற அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஜெகதாம்பாள் பரிதாபமாக இறந்தார்.
மற்றொரு சம்பவம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள வீரநத்தம் பகுதியை சேர்ந்தவர் கமலாஅம்மாள் (60). இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். அதில் பயிரிடப்பட்டிருந்த பயிர் கருகியதால் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டார்.
திடீரென்று வீட்டில் மயங்கி விழுந்த அவர் பரிதாபமாக இறந்தார்.