செய்திகள்
வைகை அணையில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தவான், விக்ராம் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

வைகை அணையில் மத்திய நீர்வள அதிகாரிகள் திடீர் ஆய்வு

Published On 2016-09-21 11:12 IST   |   Update On 2016-09-21 11:12:00 IST
வைகை அணையில் இன்று மத்திய நீர்வள அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆண்டிப்பட்டி:

வைகை அணையில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளான தவான், விக்ராம் ஆகியோர் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.

அணைப்பகுதியில் உள்ள மழைமானி, கசிவு நீர் சுரங்கம், மேல்மதகுகள், நீர் வெளியேற்றப்படும் ‌ஷட்டர்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. அவற்றின் உறுதி தன்மை பரிசோதிக்கப்பட்டதுடன் சுரங்க கசிவு நீர் குழாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது வைகை அணை ஏ.டி. குபேந்திரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நேற்று பெரியகுளம் அருகில் உள்ள மஞ்சளாறு மற்றும் சோத்துப்பாறை அணை களையும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக அணைகளின் ஸ்திரதன்மை குறித்து வருடாந்திர ஆய்வு பணிகள் என்றும் இது குறித்த அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என்றும் அதன்பிறகு அணையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அரசுக்கு அறிவுறுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

Similar News